12 ஆவது ஐ.பி.எல் தொடரின் நான்காவது போட்டி ராஜஸ்தான் ரோயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கிடையே இன்றிரவு 8.00 மணிக்கு ஜெய்ப்பூரில் ஆரம்பமாகவுள்ளது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி முதலாவதாக பந்து வீச்சை தேர்வு செய்தது.

ரகானே தல‍ைமையிலான 11 பேர் கொண்ட ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ்,ஜோஃப்ரா ஆர்ச்சர், கெளதம், ஷிரியாஸ் கோபால், யாதவ் உனாட்கட், தவால் குல்கர்னி மற்றும் சூதேசன் மிதுன் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

அஷ்வீன் தலைமையிலான 11 பேர் கொண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியில் கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், அகர்வால்,  கருன் நாயர், மண்டீப் சிங், மோய்ஸஸ் ஹென்றிக்குஸ், ஆண்ட்ரூ டை, வருண் சக்ரவர்த்தி, மொஹமட் ஷமி மற்றும் முஜிப் ஜாத்ரான் ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.