10 மணித்தியாலங்களாக பட்டினியால் 8 மாத சிசு அழுதமையால் தாய்பால் வழங்க 9 தாய்மார்கள் முன்வந்ததாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்து தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

மத்துகம பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் சிவனொளிபாத மலைக்கு சென்ற பொழுது குறித்த பெண் தனது 8 மாத குழந்தையை தனது தாயாரின் பாதுகாப்பில் ஒப்படைத்துவிட்டு மலை உச்சிக்கு சென்றுள்ளாதாவும் அவர் அதிகளவான குளிர் காலநிலை நிலவியதால் அவ்வாறு குழந்தையை தனது தாயாரிடம் கொடுத்துவிட்டு  சென்றதாக தெரிவித்தார்.

தாய் வருவதற்கு தாமதமானதால் அக்குழந்தை பசியினால் அழுதமையால் நல்லத்தண்ணி பொலிஸ் நிலையத்தில் சென்று தெரிவித்ததை தொடர்ந்து பொலிஸார் ஒலி பெருக்கியின் மூலம் அறிவித்தும் அத்தாய் வருவதற்கு தாமதமானதால் அப்பகுதியில் இருந்த 9 தாய்மார்கள்  தாய்பால் வழங்க முன்வந்துள்ளனர். 

அவ்வாறு முன்வந்த தாய்மார்களின் ஒருவரான நாவலப்பிட்டி பகுதியை சேர்ந்த சுனித்தா என்பவர் தாய்பால் வழங்கி பசியை தீர்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதன் பின்னர் உரிய தாயாரிடம் குழந்தை ஒப்படைத்ததாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்து தெரிவித்தார்.