(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

தலைமன்னார் - தமிழக கப்பல் சேவையை விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் நிர்மலநாதன் சபையில் வலியுறுத்தினார். 

பொதுப்போக்குவரத்தை நம்பி இலங்கையில் அதிமான மக்கள் பயணித்து வருகின்றனர். ஆகவே பொதுப்போக்குவரத்தை ஆரோக்கியமானதாகவும் இலகுவான சேவையாகவும், பாதுகாப்பை  உருவாக்கும் வகையிலும் உருவாக்கிக்கொடுக்க வேண்டும். 

அத்துடன் வடக்கில் இருந்து கொழும்பு நோக்கிய பயணிக்கும் இரண்டு புகையிரதங்களையும் வெள்ளவத்தை வரையில் பயணிக்க அரசாங்கம் ஏற்பாடு செய்துகொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.