(நா.தினுஷா)

தொழிநுட்ப அறிவினை துரிதப்படுத்தும் நோக்கில் விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சினால் ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய ரீதியான 'சில்ப சேனா' வேலைத்திட்டத்தை எதிர்வரும் மே மாதம் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் சுஜீவசேனசிங்க தெரிவித்தார். 

இந்த வேலைத்திட்டத்தினூடாக மக்களின் தொழில்நுட்ப அறிவினை மேம்படுத்துவதுடன் தொழிநுட்ப அபிவிருத்திகளினூடாக  வருமானத்தை அதிகரிக்கவே எதிர்பார்த்துள்ளதாகவும், ஒவ்வோரு மாவட்டங்களுக்கும் சென்று இதனை நடைமுறைப்படுத்துவதற்கான திட்டங்களும் வகுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.