(ஆர.;விதுஷா)

பதுளை மற்றும் புத்தளம் ஆகிய பகுதிகளில் நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்றே இவ்வாறு இரு இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பதுளை மாவட்டத்தின் ஹசல பகுதியிலும் , புத்தளம் மாவட்டத்தின் சிலாபம் ஆகிய பகுதிகளிலுமே இச்சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சிலாபத்தில் பலியானவர், முகுணுவட்ட வனப்பகுதியை சேர்நத சமிந்து தனஞ்சன எனப்படும் 23 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவர் நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்றுள்ள நிலையிலேயே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இதே வேளை , ஹசலவில் உயிரிழந்தவர் பேராதெனிய பல்கலைக்கழகத்தில் பயிலும் 25 வயதுடைய வென்னொறுவ பகுதியை சேர்ந்த திகாயு அபேரத்ன என்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. நீர்வீழ்ச்சியில் நீராடச்சென்றுள்ள நிலையிலேயே அவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.