(எம்.மனோசித்ரா)

நாட்டில் யுத்தம் நடைபெற்ற போது கூட அந்த பிரதேசங்களுக்கு எமது அரசாங்கத்தல் மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் இன்றைய நிலைமையில் இந்த அரசாங்கத்திற்கு இதைக் கூட முறையாகச் செய்ய முடியவில்லை என்று எதிர் கட்சி தலைவர் மஹிந்தராஜபக்ஷ தெரிவித்தார். 

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை அமைத்தபோது கடுமையாக விமர்சித்தனர். அந்த அனல்மின் நிலையம் தற்போது இல்லை என்றால் நாடு இருளடைந்திருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கம்பஹா மாவட்டத்தில்  இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.