(இராஜதுரை ஹஷான்)

எதிர்வரும் ஜனாதபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிட போவதாக  பொய்யான  வதந்திகள் பரப்பப்படுவதாக தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம, கட்சி ரீதியில் எவ்வித  தீர்மானமும் இதுவையில் முன்னெடுக்கப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.  

அத்துடன் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் செல்வாக்கினை வைத்துக் கொண்டு அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர்  ஆட்சிக்கு வருவது பொருத்தமற்றது. 

இவ்வாறான   ஆட்சி முறை   ஒருக்கட்டத்தில் மாறுப்பட்ட பிரச்சினைகளை ஏற்படுத்தும், ஜனநாயக   நாட்டில குடும்ப ஆட்சி ஏற்றுக் கொள்ள முடியாது.

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக   கோத்தபாய ராஜபக்ஷ போட்டியிடுவது  பொருத்தமற்றது. இவர் மீது எவ்வித தனிப்பட்ட பிணக்கும் கிடையாது. ஒரு நாட்டு தலைவர் ஒட்டுமொத்த மக்களின் நல்ல அபிப்ராயங்களையும் பெற்றவராக காணப்பட வேண்டும். அனைத்து இன மக்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் இவ்வாறான அபிப்ராயங்கள் கோத்தபாய ராஜபக்ஷவிற்கு காணப்படுகின்றதா என்பது சந்தேகமே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.