(ஆர்.விதுஷா)

ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்னும் போர்வையில் வெலிகடை பிரதேசத்தில் இயங்கி வந்த விபசார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வெலிக்கடை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த ஏழு பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் 20 - 39 வயதிற்குட்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவர்கள் முகத்துவாரம் , அநுராதபுரம் , அம்பாறை , எஹலியகொடை, பண்டாரவத்தை மற்றும் பந்துருகிரிய பகுதிகளை சேர்ந்தவர்கள் என விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

சந்தேக நபர்களை புதுக்கடை இல 04 நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிசார் நேற்றைய தினம் மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.