"எப்படி இருக்கீங்க" என தோனி ஆறு மொழிகளில் கேட்ட கேள்விக்கு கலக்கலாக பதிலளித்த ஸிவா..!

Published By: J.G.Stephan

25 Mar, 2019 | 01:05 PM
image

தோனிக்கு எவ்வளவு ரசிகர்களோ அந்தளவு, அவரது மகள் ஸிவாவிற்கும் ஒரு ரசிகர் பட்டாளம் இருக்கத்தான் செய்கின்றது. ஸிவா எது செய்தாலும் அது வீடியோவாக வெளிவந்து செம வைரலாகும். தோனியை பின்தொடருபவர்கள் எவ்வளவு பேர் இருக்கிறார்களோ அதற்கு இணையாக ஸிவாவுக்கும் சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருபவர்கள்  இருக்கிறார்கள்.

கடந்த ஐ.பி.எல். தொடரில் அப்படிதான் ஸிவா என்ன செய்தாலும் வீடியோவாக வெளிவந்து,  வைரலானது. இந்த வருடமும் அது தொடங்கியுள்ளது. தோனி கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் ஸிவாவின் வீடியோ நேற்று சமூக வலைதளம் முழுவதும் வைரலாகியுள்ளது.

‘எப்படி இருக்கீங்க’ என்று தோனி ஆறு மொழிகளில் கேட்கிறார். அதற்கு ஏற்றார்போல ஸிவா அந்தந்த மொழிகளில் பதில் சொல்கிறார். தமிழில்  ‘எப்படி இருக்கீங்க’ என்று தோனி கேட்க அதற்கு ஸிவா,  ‘நல்லா இருக்கேன்’ என்று தன்னுடைய மழலை மொழியில் பதில் சொல்கிறார்.

அடுத்து வங்காளம், குஜராத்தி, போஜ்புரி, பஞ்சாபி ஆகிய மொழிகளிலும் எப்படி இருக்கீங்க என்று தோனி கேட்க, ஸிவா தகுந்த மொழிகளில் பதிலளித்தார். இறுதியாக தோனி  ‘இன்ஷா அல்லாஹ்’ என்று சொல்ல  ‘மாஷா அல்லாஹ்’ என்று ஸிவா பதிலளித்தார். தற்போது இந்த வீடியோவை தோனி அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யபட்டு உள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35