சூடான் தலைநகர் கார்டூமில் உள்ள ஓம்டுர்மான் நகரில் எதிர்பாராத வகையில் குண்டொன்று வெடித்ததில் 8 சிறுவர்கள் உயிரிழந்துள்ளார்.

ஓம்டுர்மான் நகரில் இராணுவ பயிற்சி மையத்துக்கு அருகே வெடிகுண்டு ஒன்றை சிறுவர்கள் கண்டெடுத்துள்ளனர். பின்னர் சிறுவர்கள் அந்த வெடிகுண்டில் இருந்த தாமிரத்தை பிரித்து எடுப்பதற்காக முயன்றபோது, எதிர்பாராத வகையில் அந்த குண்டு வெடித்து சிதறியுள்ளது.

இதனால் 8 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.