பெப்பர்ச்சுவால் ட்ரசரீஸ் குழுமத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்பிலேயே பெப்பர்ச்சுவால் ட்ரசரீஸ் குழுமத்தின் தலைவர் ஜெப்ரி அலோசியஸ் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியில் இடம்பெற்ற பிணைமுறி மோசடியுடன் தொடர்பில் மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் பி.சமரசிறி உள்ளிட்ட பெப்பர்ச்சுவால் ட்ரசரீஸ் நிறுவனத்தின் 3பணிப்பாளர்கள் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

-=