மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன மலேசியா உயர் ஸ்தானிகருடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தினார்.

இதன்போது கண்டி நகர் அபிவிருத்தி தொடர்பான பல வேலைத்திட்டங்கள் பற்றியும் கைத்தொழில் செய்வோருக்கான விஷேட செயலமர்வு பற்றியும் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.

இக்கலந்துரையால் பற்றி ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மத்திய மாகாண ஆளுநர், 

மலேசியா உயர் ஸ்தானிகர் ரயிலில் கண்டி நகருக்கு விஜயம் செய்துள்ளார் என்றும் இலங்கையின் மத்திய மாகாண இயற்கை அழகை கண்டு இப்பகுதியில் சுற்றுலா துறை மேம்பட்ட பல வேலைத்திட்டங்கள் உள்ளதாகவும் அத்துடன் இலங்கை மலேசியா உறவு மேம்படுத்த மலேசியா நாட்டுடன் இணைந்து சுற்றுலா துறை அபிருத்திக்காக ஒரு விஷேட அபிவிருத்தி வேலைத்திட்டம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இவ்வேலைத்திட்டத்தால் மலேசியா முதலீட்டாளர்கள் கண்டி நகரில் தமது முதலீடுகளை செய்யும் வாய்ப்புள்ளதாகவும் கூறினார்.

இதன் போது மலேசியா உயர் ஸ்தானிகர் மற்றும் கலந்து கொண்ட மலேசியா அதிகாரிகளுக்கும் நினைவு சின்னங்கள் வழங்கி வைத்தார்.