அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் ஊடக சந்திப்பு கடந்த 23 ஆம் திகதி சாய்ந்தமருது அல்-ஹில்லா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் அதன் தலைவர் எம்.ஜசீர் தலைமையில் நடைபெற்றது, 

இங்கு கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அவர் மேலும் கூறுகையில்.

இந்த நல்லாட்சி அரசாங்கம் 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தின் வேலையற்ற பட்டதாரிகளுக்கென எந்தவித தீர்மானங்களும் எடுக்கவில்லை உண்மையிலேயே கடந்த ஆண்டில் கூறியதற்கமைய 1200 பேருக்கு மாத்திரம் முகாமைத்துவ உதவியாளர்கள் என்ற வேலை வாய்ப்பினை வழங்கியுள்ளது ஆனால் கிழக்கில் 4000 க்கு மேற்பட்ட பட்டதாரிகள் இன்றுவரை வேலைவாய்ப்புக்கள் இல்லாதவண்ணம் இருக்கின்றனர்.

இந்த நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் உள்ளன தொழிலாளர்களின் பிரச்சனை ஆசிரியர்களின் பிரச்சனை ஊழியர்களின் பிரச்சனை என பல உள்ளன இதனை தீர்த்து வைக்காமல் எவ்வாறு இவர்கள் மக்களிடம் வாக்கு கேட்பது இதற்கான சரியான தீர்வுகளை ஜனாதிபதியும் பிரதமரும் பெற்றுத்தரவேண்டும் 

அத்தவகையில் எதிர்வரும் 28 ஆம் திகதி கொழும்பு மருதானை பகுதியில் நாம் அனைத்து தரப்புகளையும் ஒன்றிணைத்து ஒரு பாரிய ஆர்ப்பாட்டத்தை செய்வதற்கு ஏற்பாடு செய்துள்ளோம் அத்துடன் எமது போராட்டமானது எமக்கு தீர்வு கிடைக்கும் வரையில் போராட தீர்மானித்துள்ளோம்.

ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகைதந்த போது கூறியிருந்தார் ஆறு மாதங்களின் பின்னர் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்புகளை பெற்றுத்தருவதாக ஆனால் தற்போதுவரை பெற்றுத்தரவில்லை வெறுமனே ஊடகங்களுக்கும் அவர்களது கருத்துகளுக்குமாக கருத்து கூறாமல் வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பிற்கு தீர்வினை பெற்றுத்தரவேண்டும் என இவ்விடத்தில் கூறிக்கொள்ளவிரும்புகின்றேன் எனத் தெரிவித்தார்.