உக்ரைன் வான் பகுதியில் ரஷ்ய விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களும் பறக்க உக்ரைன் தடை விதித்துள்ளது.

உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் பல்வேறு விவகாரங்களில் மோதல்கள் இருந்து வருகிறது.

இந் நிலையில் துருக்கி வான் பகுதிக்குள் நுழைந்ததாக கூறி ரஷ்ய போர் விமானம் ஒன்றை துருக்கி ராணுவம் சுட்டு வீழ்த்தியது.

இதைத் தொடர்ந்து தங்கள் வான் பகுதியில் ரஷ்யாவின் பயணிகள் விமானங்கள் உள்ளிட்ட அனைத்து விமானங்களும் பறக்க தடை விதிக்கப்படுவதாக உக்ரேன் அறிவித்துள்ளது.

இது குறித்து உக்ரைன் பிரதம் ஆர்செனிக்யாட் சென்யுக், அமைச்சரவை கூட்டத்தில் கூறுகையில், பதற்றத்தை தூண்டுவதற்காக உக்ரைன் வான் பகுதியை ரஷ்யா பயன்படுத்தக் கூடும்.

இது உக்ரைனின் தேசிய பாதுகாப்பு தொடர்பான விடயம். பூகோள மற்றும் அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.


ரஷ்ய போர் விமானத்திற்கு விடுக்கபட்ட எச்சரிக்க ஒலிப் பதிவை துருக்கி ராணுவம் வெளியிட்டுள்ளது.

ரஷியாவின் போர் விமானம் ஒன்று நேற்று முன்தினம் துருக்கியின் சிரியா எல்லையில் பறந்தது. இதன்போது குறித்த விமானத்தை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.
தங்களது வான் எல்லைக் குள் அத்துமீறி நுழைந்த தால்தான் ரஷியாவில் போர் விமானம் சுட்டு வீழ்த் தப்பட்டதாக துருக்கி தெரிவித்தது. எச்சரிக்கை விடுத் தும் அத்துமீறி பறந்த தால் சுடப்பட்டதாக கூறியது.

ரஷிய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை ஒரு போதும் சகித்து கொள்ள முடியாது. துருக்கி தங்களை முதுகில் குத்தி விட்டது. என கூறி உள்ளார்

ரஷிய விமானத்தை சுட்டு வீழ்த்திய போது துருக்கி எந்த ஒரு எச்சரிக்கையும் விடுக்கவில்லை என்று உயிர் பிழைத்த விமானி மறுப்பு தெரிவித்து உள்ளார்.
இந்நிலையில் 
ரஷிய விமானம் மீது தாக்குதல் நடத்துவதற்கு முன்னதாக நாங்கள் 10-முறை எச்சரிக்கை விடுத்தோம்... துருக்கியின் எல்லையை தாண்டிய 5 நிமிடங்கள் எச்சரிக்கை நீடித்தது என்று துருக்கி தெரிவித்தது. இந்நிலையில் எச்சரிக்கை விடுத்தோம் என்ற துருக்கியின் கூற்றை, சுட்டு வீழ்த்தப்பட்ட விமானத்தில் இருந்து உயிர் தப்பிய விமானி மறுத்து உள்ளார்.

இந்த நிலையில்   துருக்கி ராணுவம்  ரஷ்யன் போர்விமானத்திற்கு எச்சரிக்கை விடுத்த ஒலிப் பதிவை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த ஒலிப் பதிவில் ' உங்கள் இலக்கை மாற்றுங்கள்' என கேட்டு கொள்ளபட்டு உள்ளது.