இலங்கை அணிக்கு எதெிரான 3 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது.

தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி அவ்வணியுடன் 2 போட்டிகளைக்கொண்ட டெஸ்ட் தொடரிலும் 5 போட்களைக் கொண்ட ஒருநாள் தொடரிலும் 3 போட்டியைக் கொண்ட இருபதுக்கு -20 தொடரிலும் பங்கேற்று விளையாடியது.

இந்நிலையில் டெஸ்ட் தொடரை இலங்கை அணி 2-0 என வெற்றி பெற்றிருந்த நிலையில், ஒருநாள் தொடரை 5-0 என தென்னாபிரிக்க அணி வெற்றிபெற்றது.

இந்நிலையில், இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான 3 போட்டிகளைக் கொண்ட இருபதுக்கு - 20 போட்டியின் முதலிரு போட்டிகளிலும்  வெற்றிபெற்று தொடரை தன்வசப்படுத்திய தென்னாபிரிக்க அணி இன்று ஜோகன்னஸ்போர்க்கில் இடம்பெற்ற 3 ஆவதும் இறுதியுமான பேட்டியில் டக்வெல்த் லூயிஸ் முறையில் 45 ஓட்டங்களால் வெற்றிபெற்று தொடரை 3-0 என கைப்பற்றியுள்ளது.