வத்தளைப் பகுதியின் ஹெந்தல பகுதியில் பாரிய தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளதாக எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தனர்.

வத்தளை ஹெந்தல பகுதியிலுள்ள ஆடை விற்பனை நிலையத்திலேயே குறித்த தீ அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ அனர்த்தத்தையடுத்து கொழும்பு நீர்கொழும்பு வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மின்சார ஒழுக்கினால் தீ அனர்த்தம் ஏற்பட்டிருக்கலாமென சந்தேகிக்கும் பொலிஸார் தீ ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.