சுதந்திர கட்சி செயற்பாட்டைக்கொண்டே கூட்டணியின் அடுத்த கட்டம் தீர்மானிக்கப்படும் - காமினி லொக்குகே 

Published By: Priyatharshan

24 Mar, 2019 | 06:28 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வரவு - செலவு திட்டத்தின் மீதான  மூன்றாம் வாக்கெடுப்பின் போது ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி செயற்படும்  விதத்தினை வைத்தே  பரந்துப்பட்ட கூட்டணி தொடர்பிலான தீர்மானம் மேற்கொள்ளப்படும்.  2 ஆவது வாக்கெடுப்பின் போது  சுதந்திர கட்சி செயற்பட்ட விதம்  ஐக்கிய தேசிய கட்சிக்கு சாதகமாக அமைந்தது என பாராளுமன்ற உறுப்பினர் காமினி லொகுகே தெரிவித்தார்.

பரந்துப்பட்ட ஒரு கூட்டணியினை அமைக்க வேண்டுமாயின் சுதந்திர கட்சி , பொதுஜன பெரமுனவும் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டும்.   எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் கருத்திற்கு அமைக்க  பொதுஜன பெரமுனவினர் சுதந்திர கட்சியுடன் ஒத்துழைப்புடன்  செயற்பட தயாராக  உள்ளோம்.

 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வேளையில் சுதந்திர கட்சியினர் வரவு - செலவு திட்டத்தை கடுமையாக விமர்சித்தார்கள்.  இவ்வரவு - செலவு திட்டம் மக்களுக்கு எவ்வித நிவாரணங்களும் வழங்குவதாக குறிப்பிடப்படவில்லை என்று  குறிப்பிட்டவர்கள் 2ம் வாக்கெடுப்பின் போது  எதிராக வாக்களிக்காமல் வாக்களிப்பில் இருந்து விலகிக் கொண்டமையானது இரு தரப்பிலும் சாதாரண இணக்கப்பாடு கூட இதுரையில் தோற்றம் பெறவில்லை என்பது தெளிவுபடுத்தியுள்ளது.

வரவு செலவு திட்டத்தின் மீதான மூன்றாம் வாக்கெடுப்பு எதிர்வரும் மாதம் 05 ஆம் திகதி இடம் பெறவுள்ளது. இவ்வாக்கெடுப்பில் சுதந்திர கட்சி முன்னெடுக்கும் தீர்மானங்களை வைத்தே   கூட்டணி தொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். 

வரவு செலவு திட்டத்திற்கு எதிரான வாக்களித்து  சுதந்திர கட்சி ஐக்கிய தேசிய கட்சிக்கு எதிராக செயற்படுத்துகின்றது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்,  அல்லது  வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்து மீண்டும் அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்ள  வேண்டும். கூட்டணியமைத்தாலும், அமைக்காவிடினும் பொதுஜன பெரமுனவினால் வெற்றிபெற முடியும் என மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்