பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவின் ஏற்றுமதி பொருளாதார இலக்காகக் கொண்ட செயற்திட்டத்தின் கீழ் இன்று ஹம்பாந்தோட்டையில் பாரிய முதலீடு திட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இன்று காலை 9 மணிக்கு இடம்பெறற்ற இந்தத் திட்டத்தின் கீழ் 72 ஆயிரம் கோடி ரூபா முதலீடு மேற்கொள்ளப்படவுள்ளது.  

இதன் கீழ் Sliver park petroleum Private limited  தனியார் நிறுவனத்தின் பாரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் lanwa Sanstha cement Corporation Private limited  தனியார் நிறுவனத்தின் சீமெந்து தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் ஜனாதிபதி வழிகாட்டலில் பிரதமர் செயற்திட்டத்தின் கீழ் அமைச்சர் சஜித் பிரேமதாச முன்மொழிவில் இடம்பெறும் இந்த நிகழ்வில் அமைச்சர் மலிக் சமரவிக்ரம மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண்டார உள்ளிட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.