ஜேர்மனியில் பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கு சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டின் கீழ் 10 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

ஜேர்மனியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவதற்காக ஆங்காங்கே சதித்திட்டம் தீட்டி வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கிணங்க ஹெஸ்சி, ரைன்லேண்ட்-பாலாட்டினேட் மாகாணங்களில் பயங்கரவாதிகளை தேடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது. 

இதன்பேதே மேற்படி 10 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடமிருந்து கத்திகள், போதைப்பொருட்கள், மின்னணு சாதனங்கள், ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.