காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் பொகவந்தலாவ தெரேசியா கெசல்கமுவ ஒயாவில் சட்டவிரோதமான மாணிக்கக“கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு பேர் கைது செய்யபட்டுள்ளதாக பொவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இக் கைது இடம்பெற்றுள்ளதாகவும் மாணிக்கக்கல் அகழ்விற்கு பயன்படுத்தபட்ட நீர் இறைக்கும் மோட்டார் மற்றும் ஏனைய உபகரணங்களையும் கைபற்றியுள்ளதாகவும் இந்த சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட ஆறுபேரும் இரத்தினபுரி பகுதிகளை சேர்நதவர்கள் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பொகவந்தலாவ தெரேசியா தோட்டபகுதியில் தொடர் முன்று நாட்களாக 20 கும் மேற்பட்ட சந்தேக நபர்களை கைதுசெய்யபட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார் கைதுசெய்யபட்ட சந்தேக நபர்கள் ஆறு பேருக்கும் பொலிஸ் நிலையத்தினால் பிணை வழங்கபட்டு எதிர்வரும் 26 ஆம் திகதி ஹட்டன் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு பொலிஸாரினால் கட்டளை பிறப்பிக்கபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.