சக்திவாய்ந்த நிலநடுக்கம், 30 பேர் பலி : சுனாமி எச்சரிக்கை.!

Published By: Robert

17 Apr, 2016 | 10:17 AM
image

தென் அமெரிக்காவின் வடக்கு கடற்கரையோர நகரமான ஈக்குவேடர் நாட்டில் இன்று அடுத்தடுத்து தாக்கிய இரு நிலநடுக்கங்களால் 30 பேர் பலியாகியுள்ளனர். 

தலைநகர் குவிட்டோவில் இருந்து 173 கிலோமீட்டர் வடமேற்கே பூமியின் அடியில் சுமார் 20 கிலோமீட்டர் ஆழத்தில் முதலில் ஒரு மிதமான நிலநடுக்கமும், அதற்கடுத்த சில நிமிடங்களில் சக்திவாய்ந்த மற்றொரு நிலநடுக்கமும் ஏற்பட்டதாக பசிபிக் பெருங்கடல் சுனாமி எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது. 

இன்று காலை சுமார் 6.30 அளவில் முதலில் ஏற்பட்ட நிலநடுக்கம் 4.8 ரிக்டராகவும், இரண்டாவதாக ஏற்பட்ட நிலநடுக்கம் 7.8 ரிக்டராகவும் பதிவாகியுள்ளது. இவ்விரு நிலநடுக்கங்களால் குவிட்டோ நகரில் உள்ள வீடு, கட்டிடங்கள் குலுங்கின. பீதியடைந்த மக்கள் வீடுகளைவிட்டு ஓடிவந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். 

ஈக்குவேடரின் வர்த்தக நகரமான குயாகுவில் நகரில் ஒரு பாலம் இடிந்து விழுந்தது. மன்ட்டா நகரில் உள்ள விமான நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை கோபுரம் சாய்ந்து விழுந்தது. 

மேற்கண்ட மூன்று நகரங்களிலும் பல வீடுகள் இடிந்து நாசமடைந்த நிலையில், இடிபாடுகளில் சிக்கி சுமார் 30 பேர் பலியானதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் அண்டைநாடான பெருவின் வடபகுதிகளிலும் உணரப்பட்டதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன. 

இன்றைய நிலநடுக்கம் தாக்கிய பகுதியில் இருந்து சுமார் 300 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள கடலோரப் பகுதிகளில் பேரலைகள் எழக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளதால், அப்பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கனடா தேர்தல்: மார்க் கார்னி தலைமையிலான...

2026-04-15 00:17:32
news-image

பேச்சுவார்த்தையின் அடுத்த கட்டம் ஈரானின் முடிவில்...

2026-04-14 20:02:09
news-image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதலால் ஈரான்...

2026-04-14 19:43:12
news-image

துருக்கியில் பாடசாலையொன்றின் பழைய மாணவன் நடத்திய...

2026-04-14 18:01:39
news-image

எங்கள் கப்பல்களை யாரும் தொட்டால் அனுமதிக்க...

2026-04-14 13:09:42
news-image

தமிழக வெற்றிக்கழக வேட்பாளர் நூதன முறையில்...

2026-04-14 14:25:00
news-image

சர்வாதிகார போக்கை கைவிட்டால் மட்டுமே அமெரிக்காவுடன்...

2026-04-14 11:52:50
news-image

ஹோர்மூஸ் நீரிணையை நெருங்கும் ஈரானிய கப்பல்களை...

2026-04-14 11:52:31
news-image

மீண்டும் போர் தொடங்கக்கூடாது: ஈரானுக்கு ரஷ்ய...

2026-04-14 04:41:27
news-image

ஹார்முஸ் மீது அமெரிக்கா முற்றுகையிட்டதை அடுத்து...

2026-04-14 04:35:42
news-image

ஹோர்முஸ் கிழக்கு கடற்பரப்பில் கப்பல்களுக்கு முற்றுகை...

2026-04-13 20:49:52
news-image

நைஜீரிய விமானப்படைத் தாக்குதலில் பொதுமக்கள் உட்பட...

2026-04-13 16:24:21