சிவனொளிபாதமலைக்கு மொனராகலை பகுதியில் இருந்து சென்ற யாத்திரி ஒருவர் நேற்று மதியம் 2.30 மணியளவில் மாரடைப்பு காரணமாக  இறந்துள்ளார் என நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி பெனார்ந்து தெரிவித்தார்.

இவ்வாறு இறந்தவர் மொனராகலை பகுதியை சேர்ந்த 63 வயதுடையர் ஆவார்.

குறித்த நபர் மலை உச்சிக்கு செல்லும் போது சுகவீனமுற்றதால் நல்லத்தண்ணி பொலிஸ் அதிகாரிகளும் உறவினர்களும் இணைந்து அடிவாரத்தில் உள்ள தற்காலிக வைத்தியசாலைக்கு கொண்டு சென்று முதலுதவி வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அம்பியுலன்ஸ் வண்டி மூலம் கொண்டு செல்லும் வழியில் மரணித்ததாக நல்லத்தண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இதேவேளை, கடந்த சில வாரங்களாக மாரடைப்பால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது ஆகவே முதியோர் மற்றும் நோய்யாளர்கள் மிகுந்த கவனத்துடன் சிவனொளிபாத மலைக்கு வருகை தருமாறு பொலிஸ் அதிகாரி வேண்டுகோள் விடுத்தார்.