இந்தய மக்களவை தேர்தல் இன்னும் சில வாரங்களில் நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், அவருக்கு எதிராக 111 தமிழக விவசாயிகள் வேட்பு மனு தாக்கல் செய்யவுள்ளனர்.

நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, ஏப்ரல் 24ஆம் திகதி வாரணாசி செல்லவுள்ளதாகவும், வேட்புமனு தாக்கல் செய்ய பணம் வேண்டும் என்பதால், அங்கே பிச்சையெடுக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளனர்.