நியூஸிலாந்தின், கிறிஸ்ட்சர்ச் தாக்குதலின் பின்னர் பூட்டப்பட்டிருந்த இரு மசூதிகளும் மீண்டும் நேற்றைய தினம் தொழுகைக்காக திறக்கப்பட்டுள்ளது.

கடந்த 15 ஆம் திகதி நியூஸிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள அல்நூர் மசூதியிலும், லின்உட் மஸ்ஜித் மசூதியிலும் பயங்கரவாதிகள் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 49 பேர் உயிரிழந்ததுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.

இச் சம்பவத்தையடுத்து மேற்படி அல்நூர், லின் உட் மஸ்ஜித் மசூதிகளும் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் மீண்டும் தொழுகைக்காக திறக்கப்பட்டுள்ளன.

இதன்போது சுமார் 3 ஆயிரம் பேர் நகரில் அமைதிப் பேரணி நடத்தி, பயங்கரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மீதான தங்கள் அன்பை வெளிப்படுத்தினர்.