பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் தனது 70ஆவது அகவையில் காலடி வைக்கின்றார். 

இதனை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் அலரி மாளி கையில் விசேட சமயபூஜைகள் இடம் பெறவுள்ளன. அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனுள்ள சிறார்களுக்கு சக்கர நாற்காலிகளையும் வழங்கி வைக்கவுள்ளார். 

அத்துடன் பிரதமரின் பிறந்த தினத்தினை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் பல்வேறு நிகழ்வுகளை ஐ.தே.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர். 

1949ஆம் ஆண்டு பிறந்த இவர் 1977ஆம் ஆண்டு முத­லா­வது தட­வை­யாக பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக  தெரிவு செய்­யப்­பட்­டி­ருந்­த­தோடு, 1994ஆம் ஆண்டு முதல் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப்பதவியைப் பொறுப்பெடுத்திருந்தார். நாட்டின் பத்தாவது பிரதமராக பதவி வகித்துக் கொண்டிருக்கும் இவர் ஏற்கனவே இரண்டு தடவைகள் இப்பதவியை வகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.