இதயத்தின் செயற்பாட்டினை நிவர்த்திக்கும் ஊட்டச்சத்து ‘டி’

Published By: Robert

17 Apr, 2016 | 09:54 AM
image

ஒரு தாய் கருவுற்று, அண்ணளவாக 3 தொடக்கம் 4 வாரங்களுக்குள் குழந்தையின் இதயம் உருவாகித் தனது பணியை ஆரம்பிக்கின்றது. அவ்வாறு ஆரம்பித்த இதயத்தின் செயற்பாடு, அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து, இறுதியாக மரணத்தின்போதே ஓய்வு பெறுகின்றது.

தற்போதைய சடுதியான மரணங்களை அவதானித்தால், அநேகமானவை இதயநோய்களால் ஏற்படுபவையாகக் காணப்படுகின்றன. நாவிற்கான சுவையைக் கருத்திற்கொண்ட, உடல் ஆரோக்கியத்திற்கு ஒவ்வாத உணவுப் பழக்க வழக்கங்களால் இதயம் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகி, இதயச் செயலிழப்பின் காரணமான மரணங்களின் எண்ணிக்கைகள் அதிகரித்துச் செல்கின்றன. இவ்வாறான இதய செயற்பாட்டின் ஒழுங்கற்ற தன்மைகளை ஊட்டச்சத்து ‘டி’  (Vitamin D) மாற்றியமைக்கும் என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதயம் தொடர்பான ஆய்வுகள் பலவற்றினை மேற்கொண்டிருந்த பிரித்தானிய ‘லீட்ஸ்’ பல்கலைக்கழக ஆய்வாளர்கள், இதயத்தொழிற்பாட்டில் ஊட்டச்சத்து ‘டி’ செலுத்தும் செல்வாக்குத் தொடர்பில் நேரடிப் பரீட்சிப்புக்களை மேற்கொண்டிருந்தனர். கடந்த ஏப்பிறல் 4 ஆந் திகதி, அமெரிக்காவின் சிகாக்கோ நகரில் அமைந்துள்ள அமெரிக்க இதயசார் கற்பித்தல் கல்லூரியின் வருடாந்த மாநாட்டில் இக்குறிப்பிட்ட ஆய்வின் பெறுபேறுகள் பிரேரிக்கப்பட்டுள்ளன.

உடலின் பலபகுதிகளுக்குமான விநியோகத்தொகுதியாக உடலின் குருதிச் சுற்றோட்டத்தொகுதி காணப்படுகின்றது. இக்குருதியைப் உடல் முழுவதும் பாய்ச்சுவதற்கான செயற்படுகருவியாக இதயம் காணப்படுகின்றது. இதயத்தின் இடது இதய அறை குருதியால் நிரம்பியதும், அந்த அறை சுருங்கி, குருதியை பெருநாடி வழியாக உடற்பாகங்களுக்குச் செலுத்துகின்றது.

இடது இதய அறை சுருங்கியுள்ள நிலையில் வெளியேற்றப்பட்ட குருதிக் கனவளவிற்கும், விரிந்த நிலையில் அந்த அறையில் நிரம்பியிருந்த குருதிக்கனவளவிற்கும் இடையிலான விகித சதவீதம் இதயத்தின் குருதி வெளியேற்றல் பின்னம் ((ejection fraction)) எனக் கூறப்படுகின்றது. சுகதேகியான மனிதர்களில் இப்பின்னம் 60 தொடக்கம் 70 சதவீதமாகக் காணப்படுகின்றது. இக்குறிப்பிட்ட விகித சதவீதம் சராசரியாக 26 ஆகக் அமைந்த 160 நபர்கள் தெரிந்தெடுக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் இரு குழுவாக வகுக்கப்பட்டு அவர்கள் மீதான ஆய்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இவர்களில் ஒரு குழுவினருக்கு 100 மைக்ரோகிராம் ஊட்டச்சத்து ‘டி’ குளிகைகள் ஒவ்வொரு நாளும் வழங்கப்பட்டது. இதேவேளை மற்றைய குழுவினருக்கு மருந்தற்ற குளிகைகள் வழங்கப்பட்டு அவர்களது இதயத்தின் செயற்படு தன்மைகள் அவதானிக்கப்பட்டன. இந்நடவடிக்கைகள் ஒரு வருடத்திற்குத் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு, இரு குழுவிலும் உள்ளடங்கிய நபர்களின் இதயம் தொடர்பான அவதானிப்புக்கள் பதிவு செய்யப்பட்டன.

இந்த அவதானிப்புக்களின் படி, ஊட்டச்சத்து ‘டி’ குளிகைகள் வழங்கப்பட்ட குழுவினரின் இதய வெளியேற்றல் பின்ன சதவீதமானது 26 இலிருந்து 34 வரை முன்னேற்றமடைந்தமையை ஆய்வாளர்கள் அவதானித்துள்ளனர். மற்றைய குழுவினரிலான இப்பின்னம் எதுவித முன்னேற்றமும் இன்றி காணப்பட்டுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டுப் பரிசோதனையுடன் கூடிய நேரடி ஆய்விலிருந்து, ஊட்டச்சத்து ‘டி’ ஆனது இதயத்தின் ஒழுங்கற்ற தன்மைகளை மாற்றியமைப்பதில் செல்வாக்குச் செலுத்தும் என்பதைக் கண்டறிந்து தெரிவித்துள்ளனர்.

ஊட்டச்சத்து ‘டி’ அல்லாவிடின், ஆங்கிலத்தில் விற்றமின் ‘டி’ என்ற சொல்லினைக் கேட்டதும் சூரியஒளி நினைவு வருவதைத் தவிர்க்க முடியாது. சூரியனிலிருந்து வரும் குறிப்பிட்ட அலைவீச்சிலான கதிர்கள் தோலில் படுகையில், ஊட்டச்சத்து ‘டி’ உருவாகும் எனச் சிறுவயதில் படித்திருப்பீர்கள். இந்த வழிமுறையில் மட்டுமல்லாது, பாற்கட்டி, முட்டை, சில வகைத் தானியங்கள் என்பவற்றினை உணவாக நுகர்கையிலும் இந்த ஊட்டச்சத்து கிடைக்கப்பெறுகின்றது.

எனவே, இதய நோயாளிகள் வெளியிடங்களில் நடமாடுவது, அவர்களின் உடலில் சூரிய ஒளி படுவதற்கு வழியேற்படுத்தி, உடலில் ஊட்டச்சத்து ‘டி’ உருவாகுவதற்கு வழிவகுக்கும். ஆனால் அந்நபர்களின் முதுமையும், இதயநோயின் அபாய சாத்தியமும் வெளிப்புறத்திலான நடமாட்டத்திற்கு அனுமதிக்காவிட்டால், இந்த ஊட்டச்சத்துக் கொண்ட உணவுகளை உட்கொள்வது சிறந்தது. அல்லாவிடின், ஊட்டச்சத்து ‘டி’ கொண்ட மருந்துகளை உரிய பரிந்துரையளவில் உள்ளெடுத்தேனும் இதயம் சிறந்த முறையில் தொழிற்பட வழிவகுக்கலாம் என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

அ.ஹரின் சுலக்ஸ்ஸி,

யாழ். நகர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தினமும் உணவில் நெய் சேர்ப்பது உடலுக்கு...

2023-12-09 18:58:12
news-image

உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கா?

2023-12-08 16:38:54
news-image

முளைகட்டிய தானியங்களை சாப்பிடுபவர்களா நீங்கள்.? இதோ...

2023-12-06 20:20:05
news-image

புற்றுநோய் அறிகுறிகளில் அலட்சியம் வேண்டாம்!

2023-12-05 17:55:17
news-image

மருதாணி போட்டுகொள்ளப் போகிறீர்களா?

2023-12-04 16:42:05
news-image

புற்றுநோய்க்கு மருந்தாகுமா தேன்?

2023-12-02 12:38:53
news-image

‘குட்நைட்’ சொல்லப் பயமா?

2023-11-28 14:29:14
news-image

என்ட்டி பயோட்டிக்: ஹீரோவா, வில்லனா?

2023-11-25 16:33:21
news-image

நீரழிவு நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்,...

2023-11-24 17:22:53
news-image

தொப்பையைக் குறைக்க வேண்டுமா?

2023-11-24 10:50:35
news-image

நீரிழிவு ஏற்படுவதற்கான வாய்ப்பு நிலையில் நீங்கள்...

2023-11-23 10:20:11
news-image

பெண்களை குறிவைக்கும் குதிக்கால் வலி!

2023-11-22 16:47:04