கெசெல்வத்த சாங்சி ஆரச்சிவத்த பகுதியில்  07 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கெசல்வத்த பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் இன்று மாலிகாகந்த நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்  தெரிவித்துள்ளனர்..