(எம்.எப்.எம்.பஸீர்)

மன்னார் மனிதப் புதைக் குழியின் மேலதிக அகழ்வுப் பணிகள் அனைத்தும்  அடுத்து வரும் மூன்று மாதங்களுக்கு இடை நிறுத்தப்பட்டுள்ளது. 

நேற்று இரவு  மன்னார் நீதிவானின் தலமையில் நடைப் பெற்ற இப்புதைக் குழி தொடர்பிலான கூட்டத்தில் எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி இந்த மூன்று மாதத்துக்குள் தொல்பொருள் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலமையிலான குழுவினரின் தொல்பொருள் அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.