த.தே.கூ. எதிர்ப்பினை வெளியிடாதது ஏன்? - ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கேள்வி

Published By: Vishnu

23 Mar, 2019 | 05:53 PM
image

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வசீம் )

வடக்குக்கு தேர்தலை நடத்தாமைக்கான எந்த எதிர்ப்பையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வெளிப்படுத்தாது ஏனென எதிர்க்கட்சி உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சபையில் கேள்வி எழுப்பினார். 

பாராளுமன்றத்தில் இன்று கைத்தொழில் , வாணிப அலுவல்கள் , நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள் குடியேற்றம் , கூட்டுறவு அமைச்சு மற்றும் வெகுஜன ஊடகத்துறை பற்றிய அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சு ஆகியவற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு கேள்வி எழுப்பினார். 

அவர் மேலும் கூறுகையில். 

மஹிந்த ராஜபக்ஷ சர்வாதிகாரி அல்ல, அவர் சர்வாதிகாரி என்ற எண்ணத்தை உருவாக்கி ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் செயலாளரை வாங்கிகொண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர். ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின்னரே உண்மையான சர்வதிகார ஆட்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. ஐக்கிய தேசிய கட்சியும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுமே சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து செல்கின்றனர். 

எமது ஆட்சியில் கடன் வாங்கியதாகவும் அதுவே நாட்டினை நாசமாக்கியுள்ளது எனவும் ஐக்கிய தேசிய கட்சி கூறுகின்றது. மஹிந்த ராஜபக்ஷ கடன்  வாங்கினார் ஆனால் அதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டது. நீங்களும் கடன்களை பெற்றீர்கள் ஆனால் வேலைத்திட்டங்கள் என்ன நடந்துள்ளது. நீங்கள் வாங்கிய கடன் எங்கே? அந்த பணம் என்னவானது கடன்களை குறைக்க வேறு கடன்களை வாங்கினால் நாட்டின் கடன் தொகை குறையாது அவ்வாறே உள்ளதே. ஆகவே ஐக்கிய தேசிய கட்சி இந்த ஆட்சியில் நாட்டினை அபிவிருத்தி செய்யவில்லை என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04