(எம்.மனோசித்ரா)

எதிர்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அவரே தீர்மானிக்க வேண்டும். ஜனாதிபதி வேட்பாளராக என்னை நியமிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை தொடர்பில் வெளியாகிய செய்திகள் குறித்தும் அவரிடமே கேட்க வேண்டும் என்றார். 

ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை விடவும் நாட்டை அபிவிருத்தி செய்வதிலேயே கவனம் வேண்டும் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்தார். 

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.