சிரியாவில்  நிலைகொண்டிருந்த  ஐ.எஸ். தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த  இறுதி  நிலைகளும்  கைப்பற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா ஆதரவு பெற்ற  சிரியாவின் உள்நாட்டு இராணுவம் அறிவித்துள்ளது. 

சிரியாவில் ஐ.எஸ் கட்டுப்பாட்டில் இருந்த அனைத்து பிரதேசங்களும் மீட்கப்பட்டுவிட்டதாக அமெரிக்க ஆதரவு பெற்ற சிரியாவின் உள்நாட்டு இராணுவம் மேலும் அறிவித்துள்ளது. 

இதன்மூலம் சிரியாவில் ஐ.எஸ். அமைப்பின் நடவடிக்கைகள் நிறைவுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த செய்தியை வெள்ளை மாளிகையும் உறுதிப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.