ரஷ்யாவில் தரைப்படை சார்ந்த ரோபோ இராணுவத்தில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்த ரஷ்ய இராணுவ ஆராய்ச்சிப் பிரிவு திட்டமிட்டுள்ளது.

ரஷ்யாவின் இராணுவ தொழில்நுட்பப் பிரிவு உருவாக்கியுள்ள இந்த தொழிநுட்பம் மூலமாக ஆயுதம் ஏந்திய ரோபோக்கள் ஆளில்லாமல் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

அதன்படி எதிரிகள் இருக்கும் இடத்தை துல்லியமாகக் கண்டறிந்து அவர்கள் உடலில் இருந்து வெளிப்படும் வெப்பத்தை வைத்து அவர்களை அழிக்கும் பணியில் ஈடுபடும். மேலும் உடனிருக்கும் இராணுவ வீரர்கள் திரும்பும் திசைக்கு ஏற்ப தானும் திரும்பி தாக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், பல நாடுகள் தானியங்கும் ஆயுத ரோபோக்களை தடை செய்வதற்கு அழைப்பு விடுத்துள்ளன, மனிதன் ஒருவனால் ஆயுதங்கள் இயக்கடுப்பவதே ஏற்புடையது என அந்நாடுகள் வலியுறுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.