இலங்கை கிரிக்கெட் அணியின் இருபதுக்கு - 20 போட்டிகளுக்கான தலைவர் லசித் மலிங்க சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற தென்னாபிரிக்கா அணியுடனான இரண்டாவது இருபதுக்கு - 20 போட்டியில் இலங்கை அணி 16 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்த போட்டியை அடுத்து கருத்து வெளியிடும் போதே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்போது மலிங்க தெரிவிக்கையில், இவ்வாண்டு இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலக்கிண்ண போட்டிகளுடன் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

மேலும் 2020 ஆம் ஆண்டு அவுஸ்ரேலியாவில் இடம்பெறவுள்ள இருபதுக்கு - 20 உலகக்கிண்ண போட்டியுடன் தான் இருபதுக்கு - 20 அரங்கில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

35 வயதுடைய லசித் மலிங்க நேற்று இடம்பெற்ற தென்னப்பிரிக்கா அணியுடனான போட்டியில் ரீசா ஹென்றிஸ் இன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் இருபதுக்கு - 20 போட்டிகளில் 97 விக்கெட்களை வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.