புளியங்குளம் - காஞ்சனமோட்டை பிரதேசத்தில் வைத்து புதையல் தோண்டிக்கொண்டிருந்த 4 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் பெகோ ரக வாகனம் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

சந்தேக நபர்கள் தலவாக்கலை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் நெடுங்கேணி பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.