இரகசிய குறியீடு
ஐபோனினை பாதுகாக்கும் வழிமுறைகளில் ஒன்று 4 இலக்க இரகசிய குறியீடு. இதை அமைத்த பின்னர் ஒவ்வொரு முறையும் குறியீட்டினை பதிவு செய்து கைப்பேசினை பயன்படுத்தலாம். மாறாக இரகசிய குறியீட்டினை பயனாளிகள் மறந்து விட்டால் அவர்களின் தகவல்களை பாதுகாக்கும் பொருட்டு ஐபோன் சில வழிமுறைகளை தமது பயனாளிகளுக்கு வழங்கியுள்ளது.


6 முறை தவறான இரகசிய குறியீடு
உங்களது ஐபோனில் 6 முறை தவறான இரகசிய குறியீட்டினை பதிவு செய்தால் ஐபோன் திரையில் “iPhone is Disabled”என்ற சொற்பதம் சிவப்பு நிறத்தில் தெரியும். இந்த தகவல் கிடைத்தால் அடுத்த ஒரு நிமிடத்திற்கு இரகசிய குறியீட்டினை பதிவு செய்ய முடியாது. ஒரு நிமிடம் முடிந்தவுடன் மீண்டும் இரகசிய குறியீட்டினை பதிவு செய்யலாம்.


செயலிழக்கம்
பல முறை தவறான இரகசிய குறியீடினை பதிவு செய்தால் ஐபோனின் திரையில் ஐபோன் செயல் இழக்க செய்யப்பட்டுள்ளது “iPhone is Disabled” மற்றும் ஐபோனை ஐட்யூன்ஸ் உடன் இணைக்க வேண்டும் “Connect to iTunes” என்ற தகவல் கிடைக்கும். இந்த தகவல் கிடைத்ததும் ஐபோன் தானாக செயலிழந்துவிடும், இதன் பின் இரகசிய குறியீடினை பதிவு செய்ய முடியாது.


இரகசிய குறியீடினை மீட்க ஐபோனை முன்னைய நிலைக்கு மீண்டும் நிறுவ (restore)  வேண்டும். இதற்கு ஐபோனினை ஐட்யூன்ஸ் நிறுவப்பட்ட கணனியுடன் இணைக்க வேண்டும். குறிப்பாக ஐபோனினை சின்க் செய்ய பயன்படுத்தப்பட்ட கணனியுடன் இணைப்பது நல்லது.


முன்னைய நிலைக்கு மீண்டும் கொண்டுவருதல் (restore) 
அடுத்து ஐபோனினை கணனியுடன் இணைத்து ஐட்யூன்ஸ் செயலியை திறக்க வேண்டும். ஐட்யூன்ஸ் இல் ஐபோன் தெரிவை வலது பக்கம் அழுத்தி பேக்கபை தேர்வு செய்ய வேண்டும். பேக்கப் முழுமையானவுடன் ரீஸ்டோரை தேர்வு செய்யலாம்.


ரீஸ்டோர் அழுத்தும் போது இரகசிய குறியீட்டை பதிவு செய்ய வேண்டும் என்ற தகவல் கிடைத்தால் கைப்பேசியை கணனியில் இருந்து எடுத்து ஐபோனின் ஹோம் பட்டனை அழுத்தியவாறு கணனியில் இணைக்க வேண்டும், திரையில் கனெக்ட் டூ ஐட்யூன்ஸ் என்ற தகவல் கிடைக்கும் வரை ஹோம் பட்டனை தொடர்ந்து அழுத்த வேண்டும், அதன் பின் ரீஸ்டோரினை தேர்வு செய்யலாம்.


எச்சரிக்கை
தவறான இரகசிய குறியீட்டை பதிவு செய்யும் போது தகவல்களை அழிக்க வேண்டும் என ஐபோனில் தேர்வு செய்யப்பட்டிருந்தால் 10 முறை தவறான இரகசிய குறியீட்டை பதிவு செய்யும் போது ஐபோனில் இருக்கும் தகவல்கள் தானாக அழிந்துவிடும். 
தகவல்கள் ஐக்ளவுடில் பேக்கப் செய்யப்பட்டிருந்தால் அதனினை மீட்க முடியும், மாறாக பேக்கப் செய்யப்படவில்லை எனில் தகவல்களை மீட்க முடியாது.