சபரகமுவ, மத்திய, தென், ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் இடைக்கிடை இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சபரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களில் சில பிரதேசங்களில் 50 மில்லி மீற்றர் வரையில் கடும் மழை பெய்யக் கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சபரகமுவ மற்றும் மத்திய மாகாணங்ளின் சில பிரதேசங்களில் காலை பொழுது பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.