12 ஆவது ஐ.பி.எல். இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரானது நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில் முதல் போட்டியில் நடப்பு சம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

அதன்படி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இப் போட்டியானது நாளை இரவு 8.00 மணிக்கு ஆரம்பாகவுள்ளது. 

இந்த போட்டிக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஒரு வாரம் முன்பே சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தொடக்க ஆட்டத்தில் கலந்து கொள்ளும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி வீரர்கள் நேற்று பகல் விமானம் மூலம் சென்னை வந்தனர். 

நேற்று மாலை 6 மணிக்கு சேப்பாக்கம் ஸ்டேடியம் வந்தடைந்த பெங்களூரு அணி வீரர்களும் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.பி.எல். வரலாற்றில் இவ்விரு அணிகளுக்கிடையே இதுவரை 23 போட்டிகள் இடம்பெற்றுள்ளன. அதில் சென்னை அணி 15 போட்டிகளிலும், பெங்களூரு அணி 7 போட்டிகளிலும் ஒரு போட்டி வெற்றி தோல்வியின்றியும் நிறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.