வலிவடக்கில் கடற்படையினருக்கும் சுற்றுலாத்துறை திணைக்களத்திற்கும் காணிகள் சுவீகரிப்பதற்காக அளவீட்டுப் பணிகள் இடம்பெறவுள்ளது என்ற தகவலை அறிந்த பிரதேச மக்கள் இன்று காலை கடற்படை முகாமிற்கு முன்பாக ஒன்றுகூடியுள்ளனர்.

வலி வடக்கு கீரிமலை மற்றும் தல்சேனா விருந்தினர் விடுதி ஆகிய பிரதேசங்களை அண்டிய பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகளை நில அளவவையல் திணைக்களம் மேற்கொள்ள இருப்பதாக கிடைக்கப் பெற்றதகவலையடுத்து பொது மக்கள் அங்கு கூடியிருந்தனர். இதனால் அப்பகுதில் பரபரப்பு நிலைமை ஏற்பட்டது.

இதன்போது அங்கு கூடியிருந்த மக்களை கடற்படயினரும் இராணுவத்தினரும் முழுமையான கண்காணிப்பில் வைத்திருந்தை அவதானிக்கக்கூடியதாக இருந்தது. 

சம்பவ இடத்திற்கு வந்திருந்த தமிழரசுக் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, பொது மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு தாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோன் என்று பொது மக்களுக்கு உறுதியளித்தார். இதனையடுத்து அப்பகுதியில் கூடியிருந்த பொது மக்கள் அங்கிருந்து சென்றனர். 

இதேவேளை கடற்படையினருக்கும் சுற்றுலாத்துறைத் துறைத் திணைக்களத்திற்கும் காணிகள் சுவீகரிப்பதற்கான அளவீட்டுப் பணிகள் இடம்பெறவிருப்பதாக செய்திகள் பரவியிருந்த நிலையில் தமிழத்தேசியக் கூட்டமைப்பினர் பிரதமர் ரணிலிடம் குறித்த விடையத்தை தெளிவுபடுத்தியிருந்தனர். 

அதைத் தொடர்ந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்பு கொண்டு அளவிடும் பணிகளை நிறுத்துமாறு உத்தரவிட்டதாக பாராளுமன்ற உறுதிப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்திருந்ததமை குறிப்பிடத்தக்ககது.