(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)

அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீனவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வருவதாக சுட்டிக்காட்டிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், ஒலுவில் துறைமுக பிரச்சினையை தீர்த்துவைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

பாராளுமன்றத்தில் இன்று இந்த வருடத்துக்கான வரவு செலவு திட்டத்தின் கமத்தொழில், கிராமிய பொருளாதார அலுவல்கள், கால்நடை வளங்கள் அபிவிருத்தி, நீர்ப்பாசனம், கடற்றொழில் மற்றும் நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சு  மீதான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு  உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.