மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் மன்னார் பிரதேச சபையின் தலைவர் ஆகிய இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல மன்னார் நீதி மன்றம் அனுமதி வழங்கியது.

மன்னார் நகர சபைக்கும் மன்னார் பிரதேச சபைக்கும் தங்கள் எல்லை தொடர்பில் முறுகல் நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து மன்னார் பொலிசார் அமைதிக்கு பங்கம் ஏற்படுவதாகத் தெரிவித்து மன்னார் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

குறித்த வழக்கு இன்று வெள்ளிக்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் விசாரனைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டபோது, மன்னார் நகர சபையின் தலைவர், மன்னார் பிரதேச சபையின் தலைவர் மற்றும் மன்னார் நகர சபை, பிரதேச சபைகளின் உறுப்பினர்களும் மன்றில் பிரசன்னமாகி இருந்தனர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் மன்னார் நகர சபையின் தலைவர் மற்றும் மன்னார் பிரதேச சபையின் தலைவர் ஆகிய இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அனுமதி வழங்கினார்.