கல்வி கட்டமைப்பின் தரத்தின் உறுதியையும் அங்கீகாரத்தையும் பாதுகாப்பதற்கு இலங்கை கல்வி கண்காணிப்பு சேவை என்ற பெயரில் சுயாதீன நிறுவகமொன்றை நிறுவுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கல்வி கட்டமைப்பினுள் ஸ்திரமான அபிவிருத்தியை முன்னெடுத்தல், பாடசாலைகளில் கல்வி மதிப்பீடு பணிகளை மேம்படுத்தல், பாடசாலை மேற்பார்வை மற்றும் தரத்தை ஆராய்ந்து பார்ப்பதற்கு கல்வி அமைச்சிலுள்ள கல்வி தரம் மற்றும் முன்னேற்ற பிரிவு பணிகளை விஸ்தரிப்பு செய்யும் முகமாக கல்வி கண்காணிப்பு சேவை நடைமுறைப்படுத்துவதுடன், மிகவும் பலமான இயந்திரத்தின் ஊடாக குறித்த சேவையை ஊக்குவிப்பதே இதன் நோக்கமாகும்.