கர்ப்பம் தரித்திருக்கும் பல பெண்கள் பிரசவ காலத்தின் போது அவர்களின் மூளைப்பகுதியில் இரத்த உறைவு ஏற்பட்டு, பக்கவாதம் அல்லது உயிரிழப்பு போன்றவை ஏற்படுகிறது.

இதுகுறித்து மகப்பேற்று வைத்திய நிபுணர் உஷா விவரிக்கும் போது,

பெரும்பாலான பெண்கள் குறைவான வலி மற்றும் குறைவான முயற்சி ஆகியவற்றின் காரணமாக சத்திர சிகிச்சையின் மூலமாக பிரசவம் பார்ப்பதையே தெரிவு செய்கின்றனர்.

இந்நிலையில் இத்தகைய சத்திர சிகிச்சைக்கான பிரசவத்தின் போது மூளையில் ரத்த உறைவு ஏற்படும். இதன் காரணமாக பெண்களுக்கு பக்கவாதம் உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. இத்தகைய பாதிப்புகள் பெரும்பாலும் மருந்துகள் மூலமே சரி செய்யப்படும்.

அதே சமயத்தில் பிரசவத்திற்கு பின் பெண்கள் அதிக அளவு தண்ணீர் அருந்தாமல் இருந்தால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படும். தற்போது பிரசவத்தின் போது மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டால், அதற்கு மூளையில் பாதுகாப்பாக சத்திரசிகிச்சை செய்து அதனை சீராக்கும் சிகிச்சை முறையும் அறிமுகமாகி பலனளித்து வருகிறது என்றார்.