பிரபல கட்டுமான நிறுவனமாக  7 ஆண்டுகளாக  கட்டுமான பணியில் ஈடுபட்டு வரும் அம்ராபாலியின் விளம்பர தூதுவராக இருந்த டோனி திடீரென ராஜினாமா செய்துள்ளார்.

இந் நிறுவனத்தின் சார்பில் டெல்லி அருகே உள்ள நொய்டாவில் கட்டிகொடுக்கப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகள் வாடிக்கையாளருக்கு திருப்தியில்லை புகார் கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி, டோனி அம்ராபாலி நிறுவனத்துடனான உறவை துண்டிக்க வேண்டும், அல்லது அளித்த வாக்குறுதிபடி நிலுவையில் உள்ள பணிகளை முடித்துக் கொடுக்கும்படி அந்த நிறுவனத்தை கட்டாயப்படுத்த வேண்டும் என்று வீடுகளை வாங்கியவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று விளம்பரதூதுவர் பதவியை திடீரென ராஜினாமா செய்தார்.