மலையகத்தின் முக்கியதொரு சொத்தான ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பிரச்சினை: பாராளுமன்றத்தில் ஆராய்ந்து தீர்வு  

Published By: J.G.Stephan

22 Mar, 2019 | 01:04 PM
image

1.ஆசிரியர் பயிலுனர்களின் கல்விக்கு எந்த விதமான இடையூரும் ஏற்படக் கூடாது

2.நீண்டகாலம் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு இடமாற்றம்.

3.கல்வி அமைச்சினால் முன்னெடுக்கபடும் ஒழுக்காற்று  விசாரணைகள் சுயாதீனமாக இருக்க வேண்டும்.

4.நிர்வாகத்தில் ஏற்பட்டிருக்கும் பிணக்குகளுக்கு கல்லூரியின் நலன் கருதி சுமூக தீர்வு.

5.ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பிரச்சினை ஒரு சமூகத்தின் பிரச்சினையென கருதி அவதானமாக கையாள வேண்டும்.

அண்மையில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் உத்தியோகஸ்த்தர்கள், சிற்றூழியர்கள் காரியாலயத்தில் மதுபாவனை ஈடுபட்டதாகவும், இதனால் ஏற்பட்ட பிரச்சினையால் மாணவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் பிணக்குகள் ஏற்பட்டதாகவும், இந்த பிணக்கு காரணமாக பொலிஸில் சம்பந்தபட்டவர்களில் ஒரு சாரார் பொலிஸில் முறைபாடுகளையும் மேற்கொண்டுள்ளனர். 

இதற்கான விசாரணைகள் பொலிஸாரால் நடைபெற்று வரும் அதேவேளை கல்வி அமைச்சின் ஒழுக்காற்று பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் சம்பந்தபட்ட உத்தியோகஸ்த்தர்கள் சிற்றூளியர்கள் தற்காலிகமாக இடமாற்றமும் செய்யபட்டுள்ளனர்.

மேற்படி பிரச்சினை குறித்து பாராளுமன்றத்தின் கல்வி உயர்கல்வி மற்றும்  மனிதவள மேம்பாடு குழுவிற்கு முறைபாடுகள் கிடைத்தற்கு இணங்க, அதற்கான விசாரணைகள் பாராளுமன்றதில்,  பாராளுமன்றத்தின் கல்வி உயர்கல்வி மற்றும்  மனிதவள மேம்பாடு குழுவின் தலைவரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ் 21.03.2019  தலைமையில் நடைபெற்றது. 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ்¸ முஜிபுர் ரஹ்மான் உட்பட கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள் அதிகாரிகள்,  ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பீடாதிபதி உட்பட அதிகாரிகள், விரிவுரையாளர்கள், ஆசிரிய பளிலுனர்கள்¸ லிந்துல பத்தனை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள், கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ஆர்.பிரசாந்¸ உட்பட கொட்டகலை பிரதேச சுகாதார அதிகாரிகள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த விசாரணை தொடர்பில் பாராளுமன்றத்தின் கல்வி உயர்கல்வி மற்றும்  மனிதவள மேம்பாடு குழுவின் தலைவரும் பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான வடிவேல் சுரேஸ் அவர்களிடம் வினவிய போது, உங்களுக்கு கல்வியற் கல்லுரரி சம்பந்தமாக கிடைத்த முறைபாடுக்கு அமையவே இந்த விசாரணை நடைபெற்றது. மலையகத்தின் சொத்தாக காணப்படும் இந்த கல்வியற் கல்லூரியை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.

அந்த அடிப்படையில் விசாரணைகள் செய்யபட்டு சம்பந்தபட்ட அனைவரிடமும் கலந்தாலோசித்து முடிவில் ஆசிரியர் பயிலுனர்களின் கல்விக்கு எந்த விதமான இடையூரும் ஏற்படாத வகையில் விசாரணை முடிவுக்கு கொண்டுவரப்படும். நீண்டகாலம் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கபடும். கல்வி அமைச்சினால் முன்னெடுக்கபடும் ஒழுக்காற்று விசாரணைகள் சுயாதினமாக இருக்கும். அதன் முடிவுக்கு அமைய தீர்மானங்கள் எடுக்கப்படும். தற்போது,  நிர்வாகத்தில் ஏற்பட்டிருக்கும் பிணக்குகள் கல்லூரியின் நலன் கருதி சுமூகமாக தீர்க்கப்படும். மேலும், கல்வியற் கல்லூரி எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி இயங்க தேவையான அனைத்து விடயங்களும் பாராளுமன்றத்தின் கல்வி உயர்கல்வி மற்றும்  மனிதவள மேம்பாடு குழுவினால் முன்னெடுக்கும் என்று கூறினார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38