யாழில் தனியார் பஸ் வண்டி ஒன்று மின்கம்பத்துடன் மோதியதில் பயணி ஒருவர்  படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்தானது இன்று காலை யாழ் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியல்  இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.