நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் கேன் வில்லியம்சனுக்கு அந் நாட்டு கிரிக்கெட் வாரியம் மூன்று விருதுகளை அளித்து கெளரவித்துள்ளது.

நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் ஆண்டுதோறும் கிரிக்கெட்டில் சிறந்த வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு கெளரவிக்கப்படுகின்றனார்கள்.

இந் நிலையில் இவ் ஆண்டுக்கான விருது பெறுவோர் பட்டியல் நேற்று அறிவிக்கப்பட்டது.

இதில் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான ரிச்சர்ட் ஹாட்லீ விருது, சிறந்த டெஸ்ட் வீரர் மற்றும் நேர்த்தியான துடுப்பாட்டத்துக்கனா ரெட்பாத் விருது ஆகியவற்றை நியூசிலாந்து அணியின் தலைவர் கேன் வில்லியம்சன் தட்டிச் சென்றுள்ளார்.

ரிச்சர்ட் ஹாட்லீ விருதை அவர் பெறுவது இது 3 ஆவது முறையாகும். 

இதேவேதளை சிறந்த ஒரு நாள் போட்டி வீரராக ராஸ் டெய்லரும், சிறந்த 20 ஓவர் போட்டி வீரராக காலின் முன்ரோவும் தேர்வு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.