சீனாவின் கிழக்கேயுள்ள யான்செங் நகரில் அமைந்து இரசாயன தொழிற்சாலை ஒன்றில் திடீரென ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில்  47 பேர் உயிழந்துள்ளதுடன் 640 பேர் படுகாயமடைந்ததுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உரப்பொருட்கள் தயாரிக்கும் இரசாயன தொழிற்சாலையில் ஒன்றில் ஏற்பட்ட வெடிப்பை தொடர்ந்து அந்த இடத்தில் தீ பற்றி எரிந்தமையால்  மேலும் உயிரிழப்புகள் அதிகரிக்கலாமென அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட பெரும் வெடிச் சத்தத்தால் அப்பகுதியில் 2.2 ரிச்டருக்கு சமமான அளவில் ஒரு நில அதிர்வு ஏற்பட்டதாக சீனாவின் நில அதிர்வு கண்காணிப்பு தொடர்பான நிர்வாக குழு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தையடுத்து அப்பகுதியில் உள்ள சில பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

இதேபோன்றதொரு சம்பவம் கடந்த 2015 ஆம் ஆண்டில் சீனாவின் வடக்கு நகரமான டியான்ஜினிலுள்ள ஒரு இரசாயன கிடங்கில் இடம்பெற்ற தொடர்ச்சியான வெடிப்பு சம்பவத்தில் 165 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.