துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சைபெற்று வந்த பெலியத்த பிரதேச சபை ஐக்கிய தேசியக் கட்சியின் எதிர்கட்சி தலைவர் கபில பியதர்ஷன அமரகோன் இன்று அதிகாலை கராப்பிடிய வைத்தியசாலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

கடந்த புதன்கிழமை பல்லன்தர - மொரதவான பிரதேசத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்காள்ளப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.