வவுனியாவில் காயத்துடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்: மரணத்தின் காரணம் இதுவா?

Published By: Digital Desk 4

21 Mar, 2019 | 10:41 PM
image

வவுனியா நெளுக்குளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட சுற்றுவட்ட வீதியில் நேற்று (20.03) அதிகாலை வெட்டுக்காயங்களுடன் கிணற்றிலிருந்து இரண்டு பிள்ளைகளின் தாய் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த சனிக்கிழமை கணவர் வெளிநாட்டுக்கு சென்றிருந்த நிலையில், வீட்டில் குறித்த பெண்ணும் அவரது இரு பிள்ளைகளும் தனிமையில் இருந்துள்ளனர். இவர்களுக்கு பாதுகாப்பாக அயல் வீட்டு பெண்ணொருவரும் இவர்களுடன் இருந்துள்ளார்.

காலையில் அயலவர்கள் வீட்டுக்குச்சென்ற போது, இரு பிள்ளைகளும் அவர்களுக்கு பாதுகாப்பாக இருந்த பெண்ணும் உறங்கிக் கொண்டிருந்தனர். குறித்த பெண்ணை காணவில்லை. அவரை தேடி அறைக்குள் சென்றபோது, அங்கு இரத்தம் காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து பெண்ணை வீடு முழுவதும் தேடியுள்ளனர். பின்னர் வீட்டின் ஒதுக்குப்புறத்தில் காணப்படும் பாவனையற்ற கிணற்றினை எட்டிப் பார்வையிட்ட சமயத்தில் கிணற்றில் சடலமாக மிதந்துள்ளார்.

இதனையடுத்து நெளுக்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா மற்றும் நெளுக்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பொலிஸாரினால் குற்றத்தடவியல் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த குற்றத்தடவியல் பொலிஸாரினால் வீட்டின் அறையில் இரத்தம் காணப்பட்டதுடன் , கதவு மற்றும் கதவு பூட்டு போன்றவற்றில் இரத்த அடையாளமும் , பெண்ணின் கையடக்க தொலைபேசி , கத்தி , வீட்டின் அருகேயுள்ள பாழடைந்த கிணற்றிலிருந்து சடலம் ஆகியவற்றை பொலிஸார் தமது கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர். 

சடலமாக மீட்கப்பட்டவர் 11 மற்றும்5 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயார் கௌரி (வயது -32) என பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை வவுனியா நீதிவான் திருமதி தஸ்னீம் பௌசான் மற்றும் வவுனியா சட்ட வைத்திய அதிகாரி தம்மி லொவிஸ்லோவா ஆகியோர் சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு நேரடியாக சென்று சடலத்தினை பார்வையிட்டதுடன் பிரேத பரிசோதனைக்கும் உத்தரவிட்டனர். இதனையடுத்து சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கழுத்தில் சிறிய கத்திக்குத்து காயம் இருந்துள்ளது எனினும், இறப்பு காயத்தால் நிகழவில்லை. நீரில் மூழ்கி மூச்சுத் திணறியே பெண் இறந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் தொலைபேசியினை புலனாய்வு பிரிவினருக்கு வழங்கி பகுப்பாய்வு செய்யுமாறு வவுனியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌஷான் பொலிஸாருக்கு உத்தரவிட்டு விசாரணைகள் தொடர்கின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-14 06:08:27
news-image

ஐ.தே.க.வுடனான பேச்சுவார்த்தை தொடர்பில் சஜித் நேர்மறையான...

2025-02-14 01:57:12
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய மக்கள்...

2025-02-14 01:53:03
news-image

இலங்கையின் உள்ளக விவகாரங்களில் தலையிடும் ஜூலி...

2025-02-14 01:48:10
news-image

மஹிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்பு உத்தியோகஸ்த்தர்கள்...

2025-02-14 01:40:11
news-image

வெளிப்படைத்தன்மையுடன் அனைவருக்கும் சமமான வரி கொள்கை...

2025-02-14 01:26:50
news-image

எல்ல மலைத்தொடரில் ஏற்பட்ட தீ; மலைத்தொடர்...

2025-02-14 00:34:25
news-image

யு.எஸ்.எய்ட் நிறுவனத்தில் நிதி பெற்றதாக குற்றச்சாட்டு...

2025-02-13 17:39:13
news-image

சட்ட மா அதிபரை பதவி நீக்குவதற்கான...

2025-02-13 14:05:04
news-image

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில் யார்?...

2025-02-13 15:25:56
news-image

இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா,...

2025-02-13 21:48:10
news-image

வட மாகாண ஆளுநருக்கும் இலங்கை ஆசிரியர்...

2025-02-13 21:37:21