(ஜெனிவாவிலிருந்து எஸ். ஸ்ரீகஜன்)

இந்த பிரேரணை ஊடாக இலங்கை  வெளிக்காட்டிய   முன்னேற்றங்களுக்கு  சிறந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது.    பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தும் என்று வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தெரிவித்தார். 

ஜெனிவா  மனித உரிமை பேரவையில் இன்றைய தினம் இலங்கை குறித்த பிரேரணை வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டபோது   உரையாற்றுகையிலேயே  அமைச்சர் திலக்  மாரப்பன  இதனை குறிப்பிட்டார். 

இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம். அத்துடன்  உறுப்பு நாடுகளுக்கும் பிரேரணையை தயாரித்த நாடுகளுக்கும் நன்றியை தெரிவிக்கின்றோம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.